TNPSC Thervupettagam

அறிவியல் துறையில் சிறந்து விளங்குவோருக்கான G.D. பிர்லா விருது 2023

April 3 , 2024 265 days 353 0
  • பிரயாக்ராஜ் நகரில் உள்ள ஹரிஷ் சந்திரா ஆய்வுக் கல்வி நிறுவனத்தின் புகழ்மிக்க இயற்பியலாளரான டாக்டர் அதிதி சென் தே, 2023 ஆம் ஆண்டிற்கான அறிவியல் துறையில் சிறந்து விளங்குவோருக்கான G.D. பிர்லா விருதினைப் பெற்றுள்ளார்.
  • இந்த விருதானது 1991 ஆம் ஆண்டு முதல் K.K. பிர்லா அறக்கட்டளையால் ஆண்டு தோறும் வழங்கப்படுகின்றது.
  • 50 வயதுக்குட்பட்ட இந்தியாவில் வாழ்ந்து, பணிபுரியும் இந்திய அறிவியலாளர்களின் சிறந்தப் பங்களிப்புகளை இது அங்கீகரிக்கிறது.
  • இவர் இந்த விருதினைப் பெறும் 33வது அறிவியலாளர் மற்றும் முதல் பெண்மணி ஆவார்.
  • குவாண்டம் (துளிமம்) தொழில்நுட்பங்களின் மேம்பாட்டில் அவர் ஆற்றிய சிறந்தப் பங்களிப்பிற்காக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்