TNPSC Thervupettagam

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய (CSE) ஆய்வு

August 28 , 2018 2282 days 831 0
  • அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (CSE- Centre for Science and Environment) மூலம் மேற்கொண்ட நகர்ப்புற பயணம் (The Urban Commute) என்ற ஆய்வில் போபால் நகரமானது குறைந்த உமிழ்வு மற்றும் ஆற்றல் பயன்பாட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • பொதுப் போக்குவரத்து மற்றும் நடைப்பயணத்தின் அதிகப் பயன்பாட்டின் காரணமாக கொல்கத்தாவானது 6 மிகப்பெரிய நகரங்களில் மிகக் குறைந்த உமிழ்வைக் கொண்டுள்ளது.
  • அதிக ஒட்டுமொத்த உமிழ்வு மற்றும் எரிபொருள் பயன்பாட்டின் காரணமாக டெல்லியின் தரம் கீழிறங்கியுள்ளது.
  • இந்த ஆய்வு 14 நகரங்களில் கீழ்க்காண்பவற்றை அடிப்படையாகக் கொண்டது.
    • வெப்பத்தை வெளியேறாமல் பிடித்து வைக்கும் கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வு
    • நுண்துளைப் பொருள்கள் போன்ற நச்சு மாசுக்கள் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு
    • நகர்ப்புற பயணத்தின் போது எரிக்கப்படும் சக்தி
  • ஒட்டு மொத்த உமிழ்வு மற்றும் எரிபொருள் நுகர்வில் முதல் 3 இடங்கள்
    • போபால்
    • விஜயவாடா
    • சண்டிகார்
  • ஒரு முறை பயணத்தில் ஏற்படும் உமிழ்வு மற்றும் ஆற்றல் நுகர்வில் முதல் 3 இடங்கள்
    • கொல்கத்தா
    • மும்பை
    • போபால்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்