TNPSC Thervupettagam

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

November 18 , 2017 2591 days 795 0
  • வேளாண்மை, அறிவியல் மற்றும் தொழிற்நுட்பம் போன்ற துறைகளில் பரஸ்பர நன்மைகளைப் பெறுவதற்காக, இந்தியா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கிடையேயான அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப ஒத்துழைப்பு மீதான  புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்த ஒப்பந்தம் இந்திய தேசிய அறிவியல் அகாடமி (INSA – Indian National Science Academy) மற்றும் பெலாரஸ் தேசிய அறிவியல் அகாடமிக்கு (NASB – National Academy of Science of Belarus) இடையே மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
  • இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் பெலாரஸ் நாடுகளுடைய உலகளாவிய போட்டிக்குரிய தொழிற்நுட்பங்களை அடையாளப்படுத்துவதையும், மதிப்பிடுவதையும், அவற்றை மேம்படுத்தி வணிக மயமாக்குவதையும் நோக்கங்களாகக் கொண்டது.
  • இரு நாடுகளின் நிறுவனங்களும் ஆராய்ச்சி, தொழிற்நுட்ப பரிமாற்றம், இரு நாட்டு நிபுணர்கள் பரிமாற்ற பயணங்கள் மற்றும் கூட்டு பயிலரங்கங்கள் போன்றவற்றின் மூலம்  அறிவியல்  மற்றும் பொருளாதாரப் பயன்களைப் பெற்றிட  இந்த ஒப்பந்தம் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்