TNPSC Thervupettagam

அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்

October 10 , 2019 1875 days 709 0
  • 2019 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசானது பின்வருபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • டெக்சாஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜான் பி குட்னொஃப்.
    • பிங்காம்டனில் உள்ள நியூயார்க் மாகாண பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த  எம் ஸ்டான்லி விட்டிங்ஹாம்.
    • ஜப்பானில் உள்ள மீஜோ பல்கலைக் கழகம் மற்றும் ஆசாஹி கேசி கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த அகிரா யோஷினோ.
  • லித்தியம் அயனி மின்கலனின் வளர்ச்சிக்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. லித்தியம் அயனி மின்கலனானது "கம்பியற்ற, புதைபடிவ எரிபொருள் இல்லாத சமூகத்திற்கான” அடித்தளத்தை அமைத்துள்ளது.

  • 1970களில் ஏற்பட்ட எண்ணெய் குறித்த பிரச்சினையின் போது லித்தியம் அயனி மின்கலனின் அடித்தளம் அமைக்கப்பட்டது.
  • எம் ஸ்டான்லி வைட்டிங்ஹாம் என்பவர் டைட்டானியம் டி சல்பைடு எனப்படும் ஆற்றல் நிறைந்த ஒரு பொருளைக் கண்டுபிடித்தார். அவர் இதை ஒரு கேத்தோடு தயாரிக்கப் பயன்படுத்தினார்.
  • இது லித்தியம் மின்கலனில் உள்ள நேர்மின் முனையாகும்.
  • யோஷினோவின் உள்ளமைவின் அடிப்படையில் சோனி நிறுவனமானது 1991 ஆம் ஆண்டில் முதலாவது வணிக லித்தியம் அயனி மின்கலங்களை வெளியிட்டது.
  • 97 வயதில், பேராசிரியர் ஜான் பி குட்னொஃப் நோபல் பரிசு பெற்ற மிகப் பழமையான மனிதர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்