அறிவியல் மற்றும் புதுமை மேலாண்மைக்கான 2023 ஆம் ஆண்டு ஃபாலிங் வால்ஸ் பரிசு
December 21 , 2023 494 days 321 0
அப்தௌளயே டையாபேட் அவர்களின் ஆராய்ச்சிப் பணிக்காக அறிவியல் மற்றும் புதுமை மேலாண்மைக்கான 2023 ஆம் ஆண்டு ஃபாலிங் வால்ஸ் பரிசு வழங்கப்பட்டது.
மலேரியாவை உண்டாக்கும் பெண் கொசுக்களின் மரபணுக்களை மாற்றுவதன் மூலம் அவற்றை அழிக்கக் கூடிய ஒரு புதுமையான நுட்பத்தை அவர் உருவாக்கினார்.
மலேரியா பொதுவாக பெண் அனாபிலிஸ் கொசுக்கள் கடிப்பதன் மூலம் பரவுகிறது.
மரபணு இயக்கிகள் என்ற ஒரு தொழில்நுட்பத்தின் கீழ், மரபணு மாற்றப்பட்ட ஆண் கொசுக்களைச் சுற்றுச்சூழலில் விடுவதன் மூலம், பெண் கொசுக்கள் புதிய பெண் சந்ததிகளை உற்பத்தி செய்வதைத் தடுக்கின்றன.
இது பெண் கொசுக்கள் குறைவதற்கு வழிவகுக்கும் என்பதால் இதன் மூலம் கண்டம் முழுவதும் மலேரியா ஏற்படுவதற்கான காரணங்கள் குறையும்.
2021 ஆம் ஆண்டில் உலகளவில் ஏற்பட்ட 619,000 உயிரிழப்புகளில் சுமார் 96 சதவிகிதப் பங்குடன், உலகின் மிகப்பெரிய மலேரியா பாதிப்பினை ஆப்பிரிக்கா கொண்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய தரவுகளின்படி, அந்த 96 சதவீதத்தில், 80 சதவீத இறப்புகள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் ஏற்பட்டுள்ளன.