இந்தியாவைச் சார்ந்த பதிகணினியல் பொறியாளர் விகாஸ் சத்யேவிற்கு அறிவியல் மற்றும் பொறியியல் அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஆஸ்கார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருதுகள் 2018 விழாவின் பொழுது இவ்விருது வழங்கப்பட்டது.
இந்த அறிவியல் மற்றும் பொறியியல் அகாடமி விருதானது திரைப்பட தொழில்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் அறிவியல் முன்னேற்றங்களையும் சாதனைகளையும் அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.
சத்யேவின் குழுவானது “ஷாட் ஓவர் K1 காமிரா“ அமைப்பு எனும் படக்கருவியினை கருத்துருவாக்கம் செய்து, வடிவமைத்து அதனை செயல்படுத்தியதற்காக இந்த விருது அக்குழுவிற்கு வழங்கப்பட்டது.
ஷாட் ஓவர் K1 படக்கருவி அமைப்பானது மேற்பரப்பிலிருந்து உயரமான இடத்தில் உபயோகிக்கப்படும் படக்கருவி அமைப்பாகும்.
இந்த அமைப்பானது ஹெலிகாப்டரின் அடிப்பகுதியில் பொருத்தும் வகையில் படக்கருவி மற்றும் ஒளி வில்லை அமைப்பை உடையது ஆகும்.
இந்த படக்கருவி அமைப்பின் முக்கிய பணியானது ஹெலிகாப்டரின் அதிர்வுகள் படக்கருவியின் நிலையை அதிரச் செய்யாது நிலையான காட்சிகளைப் பதிவு செய்ய உதவுவது ஆகும்.