TNPSC Thervupettagam

அலங்கார மீன்களில் வைரஸ் பாதிப்பு

June 13 , 2022 899 days 463 0
  • கோய் கார்ப் என்ற ஒரு அலங்கார மீன் வகையைப் பாதிக்கும் வைரஸ் ஆனது, இந்தியாவில் முதன்முறையாகப் பதிவாகியுள்ளது.
  • இந்தியாவில் அலங்கார மீன் வர்த்தகத்தின் மையமான சென்னை கொளத்தூரின் பல்வேறு இடங்களில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
  • இது கடுமையான இறப்பு விகிதம் மற்றும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது,
  • கோய் ஹெர்பெஸ் வைரஸ் (KHV) அல்லது சைப்ரினிட் ஹெர்பெஸ் வைரஸ்-3 (CyHV-3) என்பது முதன்முதலாக 1998 ஆம் ஆண்டில் இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் பதிவாகியது.
  • சைப்ரினஷ் கார்பியோ கோய், பொதுவாக "கோய் அல்லது கோய் கார்ப்" என்று அழைக்கப் படுகிறது.
  • இது அதன் வண்ணங்கள், வடிவம் மற்றும் செதில் வடிவமைப்பு காரணமாக உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யப்படும் ஓர் அலங்கார மீன் வகை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்