August 20 , 2021
1102 days
565
- அலிகரின் ஜில்லா பஞ்சாயத்து பரிசத் அமைப்பானது அலிகர் என்ற பெயரை ஹரிகர் என மாற்றுவதற்கான ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளது.
- இந்தத் தீர்மானமானது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டப் பஞ்சாயத்து அமைப்பின் முதல் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
- இந்தத் தீர்மானமானது இறுதி முடிவிற்காக தற்போது உத்தரப் பிரதேச அரசிடம் அனுப்பப் பட்டுள்ளது.
குறிப்பு
- உத்தரப் பிரதேச அரசானது ஏற்கனவே பல இடங்களில் அதன் பெயர்களை மாற்றி உள்ளது.
- அவை பின்வருமாறு,
- ஃபைசாபாத் என்பதை அயோத்தியா எனவும்,
- அலகாபாத் என்பதை பிரயாக்ராஜ் எனவும்,
- முகல்சாராய் என்பதை தீன்தயால் உபத்யாய் நகர் எனவும் மாற்றியுள்ளது.
Post Views:
565