TNPSC Thervupettagam

அலெக்சாண்டர் டால்ரிம்பிள் விருது

July 28 , 2021 1094 days 501 0
  • துணைக் கடற்படைத் தலைவரும் இந்திய அரசின் தலைமை நீரியல் வரைபட நிபுணருமான வினய் பத்வார் பிரித்தானிய உயர் ஆணையரிடமிருந்து அலெக்சாண்டர் டால்ரிம்பிள் (Alexander Dalrymple) என்ற விருதினைப் பெற்றுள்ளார்.
  • நீரியல் வரைபடம் மற்றும் கடல்சார் வரைபடம் ஆகிய துறைகளில் அவர் ஆற்றியத் தலைமைத்துவத்திற்கு அங்கீகாரமாக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருதிற்கு கடற்படைத் தலைமையகத்தின் முதல் நீரியல் வரைபட நிபுணரின் நினைவாக இந்தப் பெயரிடப்பட்டுள்ளது.
  • உலகெங்கிலுமான நீரியல் வரைபடத்துறை வரைபடவியல் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றின் தரநிலைகளை உயர்த்தும் முயற்சியில் ஒருவர் ஆற்றும் பங்கின் அடிப்படையில் அவர்களுக்கு இந்த விருதானது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்