TNPSC Thervupettagam

அல்கொய்தா மற்றும் ISIS-ன் இரு கிளை அமைப்புகள்-தடை

June 26 , 2018 2218 days 616 0
  • மத்திய உள்துறை அமைச்சகமானது (Union Ministry of Home Affairs -MHA) பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (Anti-terror law) மற்றும் 1967-ம் ஆண்டின் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act-UAPA) கீழ், இந்திய துணைக் கண்டத்தின் அல்கொய்தா அமைப்பினையும் (Al-Qaeda in Indian Subcontinent-AQIS), கொராசன் மாகாணத்தின் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பையும் (Islamic State in Khorasan Province-ISKP) தடை செய்துள்ளது.
  • இந்திய துணைக் கண்டத்தின் அல்கொய்தா அமைப்பானது அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் கிளை அமைப்பாகும் (Affiliate). கொராசன் மாகாணத்தின் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பானது ஆப்கானிஸ்தானில் செயல்படும் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாத அமைப்பின் கிளை அமைப்பாகும்.
  • 1967-ஆம் ஆண்டின் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமானது, இந்தியாவில் சட்டவிரோத செயல்பாடுகளையும், அவற்றினோடு தொடர்புடையவற்றையும் திறம்பட்ட வகையில் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்