TNPSC Thervupettagam

அல்பைன் எல்லைகள் மறு வரையறை

October 10 , 2024 44 days 100 0
  • சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ஆனது பனிப்பாறைகள் உருகுவதன் காரணமாக கடந்த வாரம் ஆல்ப்ஸ் மலையினூடான தங்களது பகிரப்பட்ட எல்லையை மறு வரையறை செய்துள்ளன.
  • 2023 ஆம் ஆண்டில், இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் பனிப்பாறைகள் மீதான பருவநிலைத் தாக்கங்கள் மற்றும் அவற்றினால் எல்லையில் ஏற்படும் பல விளைவுகளை ஆய்வு செய்வதற்காக ஓர் ஆணையத்தினை அமைத்தன.
  • ரோசா பீடபூமி, கேரல் புகலிடம் மற்றும் கோபா டி ரோலின் ஆகியவற்றின் மீதான நில அடையாளங்களில் மாற்றங்களைச் செய்ய இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
  • சுவிட்சர்லாந்தின் செர்மாட் பகுதியானது இத்தாலியின் ஆவோஸ்டா பள்ளத்தாக்கைச் சந்திக்கும் இடம் இதுவாகும்.
  • இப்பகுதியானது இரு நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பல பனிச்சறுக்கு சார்ந்த கேளிக்கை விடுதிகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்