TNPSC Thervupettagam

அல்மேனியா மல்டிஃப்ளோரா

November 2 , 2022 627 days 380 0
  • பாலக்காடு மலைப்பகுதியில் ஆல்மேனியா மல்டிஃப்ளோரா என்ற புதிய தாவர இனம் கண்டுபிடிக்கப் பட்டது.
  • ஆல்மேனியா மல்டிஃப்ளோரா என்பது ஆல்மேனியா இனத்தைச் சேர்ந்த ஒரு புதிய இனமாகும்.
  • இது உலகில் காணப்படும் ஆல்மேனியா இனத்தினனைச் சேர்ந்த இரண்டாவது இனம் ஆகும்.
  • இந்தப் புதிய இனமானது, அந்த தாவரக் குடும்பம் மற்றும் அதன் முதல் இனமான அல்மேனியா நோடிஃப்ளோரா கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்ட 188 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப் பட்டது.
  • புதிய இனங்கள் அடையாளம் காணப்படுவதற்கு முன்பு, ஆல்மேனியா நோடிஃப்ளோரா மட்டுமே ஆல்மேனியா இனத்தின் ஒரே இனமாக நம்பப்பட்டது.
  • ஆல்மேனியா நோடிஃப்ளோரா 1753 ஆம் ஆண்டில் செலோசியா நோடிஃப்ளோரா என செலோசியா இனத்தின் கீழ் ஒன்றாக வெளியிடப்பட்டது.
  • இது பின்னர் 1834 ஆம் ஆண்டில் ஆல்மேனியா நோடிஃப்ளோரா என குறிப்பிடப்பட்டது.
  • இவை இந்திய துணைக்கண்டம் முதல், சீனா, மேற்கு மற்றும் மத்திய மலேசியா வரை பரவியுள்ளது.
  • இது மிகவும் அருகிவரும் இனமாக மதிப்பிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்