புகழ்பெற்றச் சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, ஆந்திரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையைப் பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
இது ஆந்திரப் பிரதேசத்தின் பீமாவரம் பகுதியில் அமைந்துள்ள 30 அடி உயரம் கொண்ட ஒரு வெண்கலச் சிலையாகும்.
புகழ்பெற்றச் சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜு, கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பழங்குடியினச் சமூகங்களின் நலன்களைப் பாதுகாக்கச் செய்வதற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர் நடத்தியப் போராட்டத்திற்காக நினைவு கூறப்படுகிறார்.
அல்லூரி சீதாராம ராஜு 1922 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு எதிராக ரம்பா கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கி வழி நடத்தினார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு ஆயுதமேந்தியப் பிரச்சாரத்தை மேற்கொண்டதால் உள்ளூர் மக்களால் அவர் ‘மான்யம் வீருடு’ (காடுகளின் நாயகன்) என்றும் அழைக்கப் படுகிறார்.