உலக வனவிலங்கு நிதியத்தின் அறிக்கைப்படி (WWF - World Wildlife Fund) ரஷ்யாவின் 6 பாலூட்டிகள், பறவை மற்றும் மீன் இனங்கள் ஆகியவை அழியும் நிலையை எதிர் நோக்கியுள்ளன.
இப்பட்டியல் சாய்கா கலைமான், கிர்பால்கன் பறவை, பாரசீகச் சிறுத்தை, கரண்டிவாய் உள்ளான் எனும் பறவை, சஹாலின் எனும் உணவிற்குப் பயன்படும் ஒரு பெரிய மீன் மற்றும் கழுகா என்ற ஒரு மீன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த நூற்றாண்டில் அழிவின் விளிம்பில் இருந்த சில இனங்களின் எண்ணிக்கையானது பாதுகாப்பு முயற்சிகளின் காரணமாக அதிகரித்துள்ளது.
உலக வனவிலங்கு நிதியம்
இது 1961 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அரசு சாரா அமைப்பாகும்.
இது உலகின் மிகப்பெரிய வனவிலங்குப் பாதுகாப்பு அமைப்பாகும்.
இதன் தலைமையகம் கிளாண்டில் (சுவிட்சர்லாந்து) அமைந்துள்ளது.
இது 1988 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை “வாழும் கோள்கள்” என்ற ஒரு அறிக்கையை வெளியிடுகின்றது.