TNPSC Thervupettagam

அழியும் நிலையிலுள்ள இனங்கள்

June 2 , 2019 2005 days 870 0
  • உலக வனவிலங்கு நிதியத்தின் அறிக்கைப்படி (WWF - World Wildlife Fund) ரஷ்யாவின் 6 பாலூட்டிகள், பறவை மற்றும் மீன் இனங்கள் ஆகியவை அழியும் நிலையை எதிர் நோக்கியுள்ளன.
  • இப்பட்டியல் சாய்கா கலைமான், கிர்பால்கன் பறவை, பாரசீகச் சிறுத்தை, கரண்டிவாய் உள்ளான் எனும் பறவை, சஹாலின் எனும் உணவிற்குப் பயன்படும் ஒரு பெரிய மீன் மற்றும் கழுகா என்ற ஒரு மீன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • இதற்கிடையில், கடந்த நூற்றாண்டில் அழிவின் விளிம்பில் இருந்த சில இனங்களின் எண்ணிக்கையானது பாதுகாப்பு முயற்சிகளின் காரணமாக அதிகரித்துள்ளது.
உலக வனவிலங்கு நிதியம்
  • இது 1961 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அரசு சாரா அமைப்பாகும்.
  • இது உலகின் மிகப்பெரிய வனவிலங்குப் பாதுகாப்பு அமைப்பாகும்.
  • இதன் தலைமையகம் கிளாண்டில் (சுவிட்சர்லாந்து) அமைந்துள்ளது.
  • இது 1988 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை “வாழும் கோள்கள்” என்ற ஒரு அறிக்கையை வெளியிடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்