TNPSC Thervupettagam

அழியும் நிலையில் உள்ள மெய்டே சிறு குதிரைகள்

May 23 , 2024 185 days 241 0
  • மணிப்பூர் அரசு ஆனது, சமீபத்தில் மணிப்பூரி போனி அல்லது மெய்டேய் சகோலைக் பாதுகாப்பதற்காக பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்களுடன் கைகோர்த்துள்ளது.
  • அவற்றின் எண்ணிக்கையானது சமீப காலங்களில் வேகமாகக் குறைந்து வருகிறது என்பதோடு 2003 ஆம் ஆண்டில் 17வது ஐந்தாண்டு கால கால்நடைக் கணக்கெடுப்பில் 1,898 ஆக இருந்த அவற்றின் எண்ணிக்கையானது 2012 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்ட 19வது ஐந்தாண்டு கால்நடைக் கணக்கெடுப்பில் சுமார் 1,101 ஆக குறைந்தது.
  • கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கால்நடைக் கணக்கெடுப்பில், இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து 1,089 ஆக இருந்தது.
  • இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட ஏழு குதிரை மற்றும் சிறு குதிரை இனங்களில் மெய்டே சகோல் ஒன்றாகும்.
  • மற்ற 6 இனங்களில் மார்வாரி குதிரை, கத்தியாவாரி குதிரை, ஜான்ஸ்காரி போனி, ஸ்பிட்டி சிறு குதிரை, பூட்டியா சிறு குதிரை மற்றும் கச்சி-சிந்தி குதிரை ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்