தொடர்ந்து பல்வேறு நாட்களாக நீடிக்கும் கலவரத்திற்கு எதிரான பதிலெதிர்ப்பாக நாட்டின் கரடுமுரடான (rugged) தெற்கு உயர்நில மாகாணத்தில் 9 மாத அவசரகால நிலையை பபுவா நியூகினியா (Papua New Guinea) நாட்டின் பிரதமர் பிரகடனப்படுத்தியுள்ளார்.
2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மன்றத்தை (Asia-Pacific Economic Cooperation- APEC) நடத்த உள்ள மிகச்சிறிய ஆனால் வளங்கள் செறிந்த பசுபிக் பெருங்கடல் நாடான பபுவா நியுகினியாவில் வன்முறை மற்றும் சட்டத்திற்கு புறம்பான நிலையில் நீண்ட காலமாக போராட்டம் நடந்து வருகின்றது.
வாக்கு மோசடி குற்றச்சாட்டுகளுக்கு நடுவிலும் பிராந்திய ஆளுநராக வில்லியம் போவியினுயை (William Powi) தேர்ந்தேடுப்பினை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதன் காரணமாக இக்கலவரம் நடைபெற்று வருகின்றது.
முன்னாள் காவல் அதிகாரி மற்றும் இம்மாகாணத்தின் பொறுப்பு நிர்வாகியான தாமஸ் எலுஹ்-விற்கு அரசியலமைப்பு சட்ட அவசரகால அதிகாரங்கள் (Constitutional emergency powers) வழங்கப்பட்டுள்ளன.