TNPSC Thervupettagam

அவசர கடன் உத்தரவாதத் திட்டம்

August 21 , 2022 699 days 489 0
  • “அவசர கடன் உத்தரவாதத் திட்டத்தின் பயன்களை (ECLGS)” அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதன் மூலம் இத்திட்டத்தின் வரம்பு 5 டிரில்லியன் ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.
  • விருந்தோம்பல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2020 ஆம் ஆண்டில் அவசரக் கடன் உத்தரவாதத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • கோவிட்-19 பெருந்தொற்றிற்குப் பிறகு வணிகர்கள் தங்கள் செயல்பாட்டுக் கடன்களைத் தீர்க்கவும், மீண்டும் தொழில் தொடங்கவும் உதவுவதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், கடன் பெற்றவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு 100% உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 ஆம் தேதி வரை சுமார் 3.67 டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான கடன்கள் இந்தத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளன.
  • இத்திட்டம் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்