மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த குழுவினர் உள்நாட்டிலேயேத் தயாரித்து மேம்படுத்தப்பட்ட ஒரு ஹைப்பர்லூப் பெட்டியை ஸ்பேஸ்எக்ஸ் அமைப்பால் நடத்தப்படும் ஒரு போட்டியின் இறுதிச் சுற்றில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர்.
இது இந்தியாவில் முதன்முதலில் சுயமாக இயங்கக்கூடிய, முழுமையான, மற்றும் ஒரு தன்னிச்சை வாய்ந்த ஹைபர்லூப் பெட்டியைக் கட்டமைப்பதற்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட ஒரு சாதனமாகும்.
ஹைபர்லூப் என்பது போக்குவரத்தின் 5-வது முறைமையாகும். இது வெற்றிடக் குழாயில் செல்லக்கூடிய ஒரு அதிவேக இரயிலாகும்.