TNPSC Thervupettagam

அஸ்காபாத் ஒப்பந்தம்-இந்தியா

February 3 , 2018 2486 days 826 0
  • சர்வதேச போக்குவரத்து மற்றும் கடப்பு வழிப்பாதையை உருவாக்குதல் மீதான ஒப்பந்தத்தில் (Agreement on Establishment of an International Transport and Transit Corridor) இந்தியா இணைக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தம் அஸ்காபாத் ஒப்பந்தம் (Ashgabat Agreement) என்றும் அழைக்கப்படுகின்றது.
  • இந்த ஒப்பந்தத்திற்கான இந்தியாவின் இணைவு 2018 ஆம் ஆண்டின் பிப்ரவரி மூன்றாம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும்.
 அஸ்காபாத் ஒப்பந்தம்
  • மத்திய ஆசிய நாடுகளுக்கும், ஈரானிய ஓமானிய துறைமுகங்களுக்கும் இடையே மிக அருகாமையில் அமைந்த வர்த்தகப் பாதையை உருவாக்குவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
  • 2011ஆம் ஆண்டு ஓமன், ஈரான், டர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளால் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இவையே இந்த ஒப்பந்தத்தின் நிறுவன நாடுகளாகும். (Founding members).
  • பின்னர் கஜகஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் இணைந்தன.
  • ஈரான்-டர்க்மெனிஸ்தான்-கஜகஸ்தானிற்கு இடையேயான இரயில்வேப் பாதையானது அஸ்காபாத் ஒப்பந்தத்தின் முக்கியமான பாதையாகும்.
  • மேலும் இது இந்தியா நிதியளித்து வரும் வடக்கு-தெற்கு சர்வதேச போக்குவரத்து வழிப்பாதையின் (International North-South Transport Corridor – INSTC) ஒரு பகுதியாகவும் இணைக்கப்பட்டுள்ளது.
  • அஸ்காபாத் நகரானது டர்மெனிஸ்தான் நாட்டின் தலைநகராகும்.
  • இது கராகும் (Karkum) பாலைவனத்திற்கும், கோபெட் டேக் (Kopet Dag) மலைத் தொடருக்கும் நடுவே அமைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்