இந்திய விமானப்படையானது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பார்வைக்கெட்டும் தூரத்தை தாண்டி வான்வெளியிலிருந்து வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் திறனுடைய ஏவுகணையான அஸ்திரா என்ற ஏவுகணையை சுகாய் - 30 ரக விமானத்திலிருந்து ஏவி வெற்றிகரமாக சோதனை செய்திருக்கின்றது .
இந்த ஏவுகணை மேற்கு வங்காளத்தின் கலைகுன்டா விமானப் படை நிலையத்திலிருந்து சோதனை செய்யப்பட்டது.
இந்த ஏவுகணையானது கொடுக்கப்பட்ட இலக்கான பான்ஷி ரக ஆளில்லா
விமானத்தை உயர்துல்லியத் தன்மையுடன் வெற்றிகரமாக தாக்கியது.
அஸ்திரா ஏவுகணையானது இந்திய விமானப்படை மற்றும் DRDO (Defense Research and Development Organization) ஆல் இணைந்து உருவாக்கப்பட்டது. இது ஒற்றை நிலை திட எரிபொருளால் இயங்கக் கூடியது மற்றும் அனைத்து காலநிலைகளிலும் இயங்கக்கூடிய ஏவுகணையாகும்.