மலேசியாவின் இபாக்கில் உள்ள அஸ்லான் ஷா அரங்கத்தில் நடைபெற்ற சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கிக் கோப்பைப் போட்டியின் 28-வது பதிப்பில் 17-வது இடத்தில் உள்ள தென் கொரிய அணியானது 5-வது இடத்தில் உள்ள இந்தியாவை வீழ்த்தியது.
பெனால்டி ஆட்டத்தில் 4-2 என்ற கணக்கில் இந்தியா வீழ்ந்தது.
இது 1983 ஆம் ஆண்டில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் போட்டியாகத் தொடங்கியது.
இப்போட்டியின் வளர்ச்சி மற்றும் சிறப்புத் தன்மை ஆகியவற்றைத் தொடர்ந்து 1998 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரு வருடாந்திர நிகழ்ச்சியாக இது உருவெடுத்தது.
இந்த போட்டிக்கு ஹாக்கிப் போட்டியின் ரசிகரான மலேசியாவின் 9-வது மன்னரான யாங்-டி-பெர்டுலான் அகோங்கான் சுல்தான் அஸ்லான் ஷா என்பவரின் நினைவாக இப்பெயர் வைக்கப்பட்டது.