TNPSC Thervupettagam
December 21 , 2024 2 days 34 0
  • இந்தியக் கிரிக்கெட் வீரர் இரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
  • அவர் தனது 14 ஆண்டு கால கிரிக்கெட் பயணத்தினை டெஸ்ட் போட்டிகளில் எடுத்த 537 விக்கெட்டுகளுடன் நிறைவு செய்துள்ள நிலையில் இது அனில் கும்ப்ளேவின் 619 விக்கெட்டுகள் என்ற சாதனைக்கு அடுத்த நிலையில் உள்ளது.
  • அஸ்வின் 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில் T20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
  • பல்வேறு வடிவத்திலான கிரிக்கெட் போட்டிகளில் 765 சர்வதேச விக்கெட்டுகளுடன், கும்ப்ளேவுக்கு (953) அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது அதிக கிரிக்கெட் விக்கெட்டுகளை வீழ்த்திய கிரிக்கெட் வீரராக அஷ்வின் திகழ்கிறார்.
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 100 விக்கெட்டுகளை எட்டிய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • தற்போது 41 போட்டிகளில் 195 வீரர்களை ஆட்டமிழப்பு செய்ததுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மிக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முன்னணியில் அவர் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்