TNPSC Thervupettagam
July 12 , 2023 356 days 304 0
  • சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU) ஆனது ஒரு சிறியக் கிரகத்திற்கு இந்திய வானியலாளர் அஸ்வின் சேகரின் பெயரினை இட்டு அவரைக் கௌரவித்துள்ளது.
  • அஸ்வின் அவர்களின் பெயரிடப்பட்ட இந்தச் சிறிய கிரகமானது இனி (33928) அஸ்வின் சேகர் = 2000LJ27 என அறியப் படும்.
  • இவருக்கு முன்னதாக ஐந்து இந்தியர்களுக்கு மட்டுமே இத்தகைய கௌரவம் வழங்கப் பட்டுள்ளது.
  • அவர்கள்
    • நோபல் பரிசு பெற்ற சி.வி.இராமன் & சுப்ரமணிய சந்திரசேகர்;
    • கணிதவியலாளர் சீனிவாச இராமானுஜன்;
    • பிரபல இயற்பியலாளர் & வானியலாளர் டாக்டர். விக்ரம் சாராபாய்;
    • சிறந்த வானியலாளர் & சர்வதேச வானியல் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும், வில்சன்-பப்பு விளைவின் இணை கண்டுபிடிப்பாளருமான மணாலி கல்லட் வைனு பப்பு
  • சிறு கோள்களுக்குப் பெயரிடச் செய்வதற்குக் கௌரவப் பெயரிடல் முறை மற்றும் வழக்கமான பெயரிடல் என இரண்டு பெயரிடும் முறைகள் பின்பற்றப் படுகின்றன.
  • கௌரவப் பெயரிடல்  என்பது தாகூர், காந்தி, பண்டிட் ஜஸ்ராஜ், விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் கைலாஷ் சத்யார்த்தி போன்ற பிரபல நபர்களுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கச் செய்வதைப் போன்றதாகும் .
  • வழக்கமான பெயரிடல் முறையானது, அந்தந்தத் துறைகளில் சிறந்து விளங்கும் அறிவியலாளர்களைக் கௌரவிக்கும் நோக்கில் உருவாக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்