அஸ்ஸாம் வேளாண் வர்த்தகம் மற்றும் கிராமப்புற மாற்றம் எனும் திட்டத்திற்காக இந்திய அரசானது உலக வங்கியிடம் 200 டாலர்கள் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அஸ்ஸாமில் உள்ள 16 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெண்கள் நடத்தும் தொழிற்நிறுவனங்கள் மீதும், உழவர் உற்பத்தியாளர் கழகத்தின் முடிவெடுப்புகளில் அத்தகு பெண் தொழிற் நிறுவனங்களின் பங்களிப்பின் மீதும் முக்கிய கவனம் செலுத்தப்படும்.
இத்திட்டமானது வேளாண் வணிக முதலீடுகளை எளிதாக்குவதற்காக அஸ்ஸாம் மாநில அரசிற்கு ஆதரவளிக்கும்.
வேளாண் உற்பத்தியையும், சந்தை அணுகலையும் அதிகப்படுத்தும்.
மாநிலத்தில் அடிக்கடி நிகழும் வெள்ளம் மற்றும் வறட்சிக்கு நெகிழ்வுடைய பயிர்களை சிறிய பண்ணை உரிமையாளர்கள் உற்பத்தி செய்ய வழி வகுக்கும்.
இது அஸ்ஸாம் மாநிலத்தின் தொலைநோக்கான வேளாண்மையை அடிப்படையாக கொண்ட ஊரக மாற்றத்தை முழுமைப்படுத்தும்.
IBRD (International Bank for Reconstruction and Development)- பன்னாட்டுபுனரமைப்புமற்றும்மேம்பாட்டுவங்கி
பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியானது நடுத்தர வருமானமுடைய வளரும் நாடுகளுக்கு கடனளிக்கும் ஓர் சர்வதேச நிதியியல் நிறுவனமாகும்.
இது உலக வங்கி குழுமத்தினில் உள்ளடங்கியுள்ள ஐந்து நிறுவனங்களில் முதன்மையான முதல் நிறுவனமாகும்.
இரண்டாம் உலகப் போரால் பாழடைந்த ஐரோப்பிய நாடுகளின் புனரமைப்புக்கு நிதி வழங்கும் நோக்கோடு 1944-ஆம் ஆண்டு IBRD உருவாக்கப்பட்டது.