அஸ்ஸாம் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (Armed Forces (Special Powers) Act - AFSPA) மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
August 9 , 2017 2665 days 1056 0
அஸ்ஸாம் மாநிலத்தில் ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டம் (Armed Forces (Special Powers) Acts - AFSPA) மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது . அதற்கு ஏற்றவாறு , ஒட்டுமொத்த அஸ்ஸாம் மாநிலமும் ‘பாதிக்கப்பட்ட பகுதி’ (‘disturbed area’) என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேகாலயாவின் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளும் அஸ்ஸாமை ஒட்டியுள்ள பகுதிகளும் அருணாச்சல பிரதேசத்தின் மூன்று மாவட்டங்களும் பாதிக்கப்பட்ட பகுதியாக மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் உள்ளது.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமானது 1958 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது.
தற்சமயம் , ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கும் மாநிலங்கள் :
அருணாசலப் பிரதேசம்
அஸ்ஸாம்
மணிப்பூர்
மேகாலயா
மிசோரம்
நாகலாந்து
ஜம்மு காஷ்மீர்
திரிபுரா மாநிலத்தில் மே மாதம் 2015 இல் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் விலக்கப்பட்டது.