ஆகஸ்ட் கிராந்தி தினம் அல்லது வெள்ளையனே வெளியேறு இயக்கத் தினம் ஆனது, 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 ஆம் தேதியன்று வரலாற்றுப் புகழ்பெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தொடக்கத்தை நினைவு கூருகிறது.
1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 ஆம் தேதியன்று பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் குழு அமர்வின் போது வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்த ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் விளைவாக 1943 ஆம் ஆண்டின் இறுதியில் குறைந்தது 1,000 இந்தியர்கள் உயிரிழந்தனர் என்ற நிலையில் மேலும் சுமார் 60,000 பேர் கைது செய்யப் பட்டனர்.
1943 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் முடிவுக்கு வந்தது.
2024 ஆம் ஆண்டில் இந்தியா வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 82வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகிறது.