ஆகஸ்ட் மாதத்தில் தொடர்ந்து ஆறாவது மாதமாக சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1.4 டிரில்லியனுக்கு மேல் வசூலாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சேகரிக்கப்பட்ட மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ஆனது ரூ.1.43 டிரில்லியன் ஆகும்.
இதில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூ.24,710 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூ.30,951 கோடி, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ரூ.77,782 கோடி (இறக்குமதி செய்யப்பட்டப் பொருட்கள் மீது வசூலான ரூ.42,067 கோடி உட்பட) மற்றும் செஸ் வரி ரூ.10,168 கோடி (இறக்குமதி செய்யப்பட்டப் பொருட்களின் மீதான ரூ.1,018 உட்பட) ஆகியவை அடங்கும்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ஆனது ரூபாய் 1.67 டிரில்லியனாக உயர்ந்தது.