இந்த ஏவுகணையை ஒடிசா கடற்கரையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
ஆகாஷ்-என்ஜி ஒரு நடுத்தர தூர வரம்பு கொண்ட, நடமாடும் வகையிலான, நிலத்தில் இருந்து விண்ணில் இருக்கும் இலக்கைத் தாக்கும் ஒரு வகை ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பாகும்.
இந்த ஏவுகணையால் வான்வழி அச்சுறுத்தல்களைத் தடுக்க முடியும்.
இது 18,000 மீட்டர் உயரத்தில் 50-60 கி.மீ தூரத்தில் ஒரு விமானத்தைக் குறி வைக்கும் திறனைக் கொண்டுள்ளது.
இது இந்திய தரைப்படை மற்றும் இந்திய விமானப்படையுடன் செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சரவைக் குழுவானது ஆகாஷ் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பின் ஏற்றுமதியை அனுமதித்துள்ளது.