ஆகாஷ் குறுகிய தூர தாக்குதல் வரம்புடைய நிலம் விட்டு வானில் உள்ள இலக்குகளை நோக்கி ஏவக்கூடிய எறிகணைகளை விற்பனை செய்வதற்காக என்று பிலிப்பைன்ஸ் நாட்டுடன் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு ஏற்றுமதி ஒப்பந்தத்தினை இந்தியா பெற வாய்ப்புள்ளது.
இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், இது மணிலாவுடனான இந்தியாவின் மிகவும் பெரிய இரண்டாவது ஆயுத ஒப்பந்தத்தைக் குறிக்கும்.
இந்த ஒப்பந்தமானது, 2023 ஆம் ஆண்டில் ஆர்மேனியாவிற்கு இந்தியா மேற்கொள்ளும் சுமார் 230 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆகாஷ் எறிகணை ஏற்றுமதியை விட பெரிய ஒப்பந்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில், பிலிப்பைன்ஸுக்கு இந்தியா மேற்கொண்ட பிரம்மோஸ் சுமார் 375 மில்லியன் டாலர் மதிப்பிலான மீயொலி சீர்வேக எறிகணை மீதான ஏற்றுமதியைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ஆனது மேற்கொள்ளப்பட்டது.
ஆகாஷ் எறிகணையானது 25 கி.மீ வரையிலான தாக்குதல் வரம்பைக் கொண்டுள்ளது மற்றும் வான்வழி அச்சுறுத்தல்களைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு முதல் நாட்டின் பாதுகாப்பு ஏற்றுமதி சுமார் 150 சதவீதம் அதிகரித்து, 2023-24 ஆம் நிதியாண்டில் (FY) 2.4 பில்லியன் டாலர்களை எட்டியது.
இந்த அளவில் வளர்ச்சி இருந்த போதிலும், இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி ஆனது சீனா, தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றினை விட குறைவாகவே உள்ளது.