TNPSC Thervupettagam

ஆகாஷ் ஏவுகணை ஏற்றுமதி

January 5 , 2021 1423 days 725 0
  • பாதுகாப்பு உபகரணங்களில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்  அளவிற்கு ஏற்றுமதியை இலக்காகக் கொள்ளும் நோக்கில் ஆகாஷ் ஏவுகணையை ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஆகாஷ் ஏவுகணை என்பது நிலப்பரப்பில் இருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் அழிக்கும் வகையில் 25 கி.மீ வரம்பினைக் கொண்ட குறுகிய தூரம் பாயும்  ஒரு உள்நாட்டு ஏவுகணை ஆகும்.
  • இது ஒருங்கிணைந்த வழிகாட்டப் பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் (1984) கீழ் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப் பட்டது.
  • இது 2014 ஆம் ஆண்டில் விமானப் படையிலும், 2015 ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்திலும் சேர்க்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்