TNPSC Thervupettagam

ஆகாஷ் ஏவுகணை

December 7 , 2017 2546 days 1016 0
  • ஒடிஸாவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை பகுதியில் உள்நாட்டுத் தொழிற்நுட்பமுடைய ரேடியோ அதிர்வெண் தேடியை கொண்ட  மீயொலி வேகம் உடைய (Supersonic) நிலத்திலிருந்து வான் இலக்கிற்கு ஏவக்கூடிய [Surface to Air] ஆகாஷ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் [DRDO – Defence Research & Development Organisation] ஆனது ஒருங்கிணைந்த வழிகாட்டு ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் [Integrated Guided Missile Development Programme] உள்நாட்டுத் தொழிற்நுட்பத்துடன் இதனை உருவாக்கியுள்ளது.
  • இது உள்நாட்டு தொழிற்நுட்பமுடைய மற்றும் நடுத்தர இலக்கு வரம்புடைய [Medium Range] நிலத்திலிருந்து வானில் உள்ள  இலக்கிற்கு ஏவக்கூடிய ஏவுகணையாகும்.
  • 18,000 மீட்டர் உயரத்தில், 30 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை இது அழிக்க வல்லது.
  • இந்த ஏவுகணையில் உள்ள ரோஹினி ரேடாரானது 120 கி.மீ. வரை வரம்பில் இருக்கும் விமானங்களை கண்டறியக் கூடியது.
  • இது போர் விமானங்கள், சீர்வேக ஏவுகணைகள் மற்றும் கண்டங்களுக்கு இடையேயான ஏவுகணைகள் போன்றவற்றை இடைமறித்து அழிக்க வல்லது.
  • ஆகாஷ் ஏவுகணை தான் உள்நாட்டு தொழிற்நுட்பத்துடனான, ரேடார் அதிர்வெண் தேடி கொண்ட, நிலத்திலிருந்து வானில் உள்ள இலக்கிற்கு ஏவக்கூடிய   (Surface to Air)  பரிசோதிக்கப்பட்ட  முதல்  ஏவுகணை ஆகும்.
  • இந்த ஏவுகணை ஆனது குறைதூர வரம்புடைய நிலத்திலிருந்து வான் நோக்கி ஏவக்கூடிய ஏவுகணையாக (Short Range Surface to Air Missile)  இந்திய தரைப்படை இராணுவத்தில் இணைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்