TNPSC Thervupettagam

ஆக்கிரமிப்புத் தாவரங்களை ஒழிப்பதற்கான திட்டம்

February 6 , 2023 531 days 324 0
  • கேரள வனத் துறை  ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள உயிரியல் ஆக்கிரப்புகளுக்கான முதன்மை மையம் ஆனது (NCBI) சென்னா ஸ்பெக்டாபிலிஸ் என்ற தாவர இனத்தினை ஒழிப்பதற்கான ஒரு மேலாண்மைத் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது அந்த மாநிலத்திலுள்ள உயிரினங்களின் வாழ்விடத்திற்கு மிகவும் மோசமான அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு அயல்நாட்டு ஆக்கிரமிப்புத் தாவரமாகும்.
  • சென்னா ஸ்பெக்டாபிலிஸ் என்பது அமெரிக்காவின் வெப்பமண்டலப் பகுதிகளைச் சேர்ந்த ஒரு இலையுதிர் கால மரமாகும்.
  • இது குறுகிய காலத்தில் 15 முதல் 20 மீட்டர் வரை வளரக் கூடியதோடு, பூத்தல் என்ற நிகழ்விற்குப் பிறகு ஆயிரக்கணக்கான விதைகளை பரவச் செய்யக் கூடியது.
  • மரத்தின் தடிமனான இலையானது பிற பூர்வீக மர இனங்கள் மற்றும் புல் இனங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
  • இதனால் வனவிலங்குகளுக்கு குறிப்பாகத் தாவர உண்ணிகளுக்கு மிகப்பெரிய ஒரு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது.
  • இது பூர்வீக இனங்களின் முளைத்தல் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றினையும் மோசமாக பாதிக்கிறது.
  • இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலின் கீழ் 'குறைந்தபட்ச கவனம் தேவைப்படும் நிலையில் உள்ள இனம்' என வகைப்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்