ஐந்து முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் பெற்ற ஹங்கேரியா நாட்டினைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் (சீருடற்பயிற்சிகள்) வீராங்கனை ஆக்னஸ் கெலேட்டி (103) சமீபத்தில் காலமானார்.
அவர் உலகின் மிக வயதான ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நபர் ஆவார் மற்றும் இரண்டாம் உலகப் போரில் யூதர்களின் துன்புறுத்தல் முகாம்களில் இருந்து தப்பியவர் ஆவார்.
1956 ஆம் ஆண்டில், மெல்போர்னில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று, தங்கம் வென்ற மிக வயதான ஜிம்னாஸ்ட் வீராங்கனை என்ற பெருமையினைப் பெற்றார்.
அவர் ஐந்து தங்கங்கள் உட்பட 10 ஒலிம்பிக் பதக்கங்களை வென்று, இதுவரை அதிகப் பதக்கங்கள் பெற்ற ஹங்கேரியத் தடகள வீராங்கனையாக இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.