TNPSC Thervupettagam

ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-1 விண்வெளித் திட்டம்

April 26 , 2022 853 days 486 0
  • சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணிக்க உள்ள முதல் தனியார் விண்வெளி செயல்திட்டமாக ஆக்ஸியம்-1 உருவெடுத்துள்ளது.
  • இது ஆக்ஸியம் ஸ்பேஸ் எனப்படும் தனியார் விண்வெளி நிறுவனத்தினால் திட்டமிடப் பட்டுச் செயல்படுத்தப்பட்டது.
  • ஆக்ஸியம்-1 நாசாவிடமிருந்து அனுமதியைப் பெற்று, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தைப் பயன்படுத்தி,  சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான தனது விண்கலத்தினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
  • விண்வெளிப் பயணத்தை வணிக ரீதியாகச் சாத்தியமாக்குவதன் மூலம், விண்வெளிக்கு ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு வந்து விண்வெளி மற்றும் மனித உடலைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்த முடியும் என்று ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்