“வேலைக்கு வெகுமதி ஆனால் சொத்தில் அல்ல” (Reward work, not wealth) என்ற தலைப்பில் சர்வதேச உரிமைகள் அமைப்பான (International rights group) ஆக்ஸ்பாம் அமைப்பு ஆக்ஸ்பாம் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில் நாட்டில் உருவான மொத்த 73 சதவீத வளத்தில், அதாவது சொத்துகள் அனைத்தும் 1 சதவீத பணக்காரர்களிடம் குவிந்துள்ளது,
2017 ஆண்டில் இந்தியாவில் ஒரு சதவீத பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ. 20.9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இத்தொகையானது மத்திய அரசின் 2017-18 ஆம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட்டின் தொகைக்கு இணையானதாகும்.
இந்திய மக்கள் தொகையுள் ஏழைகளின் எண்ணிக்கையில் பாதியைக் கொண்ட 67 கோடி இந்தியர்களின் வருமானம் கடந்த ஆண்டு வெறும் ஒரு சதவீதம் மட்டும் அதிகரித்துள்ளது. இது வளர்ந்து வரும் வருமான சமமின்மை (Income Inequality) குறித்து வருந்தத்தக்க அம்சமாகும்.
2017-ல் இந்தியாவில் புதிதாக 17 கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இதன் மூலம் நாட்டிலுள்ள பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.
உலகளவில் 2017 ஆம் ஆண்டு உருவான 82 சதவீத வளமானது ஒரு சதவீத உலக பணக்காரர்களின் கைவசத்தில் உள்ளது.
இத்தகு வளத்திலிருந்து, உலகின் மொத்த ஏழை மக்களின் மக்கள் தொகையில் பாதியளவுள்ள 7 மில்லியன் மக்களில் எவரும் தங்களது வருமானத்தில் எத்தகு அதிகரிப்பையும் காணவில்லை என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக்ஸ்பாம் அறிக்கையின் தயாரிப்பு மற்றும் வெளியிடலுக்கு பயன்பட்ட மூல தரவு ஆதாரங்களாவன:
போர்ப்ஸ் கோடீஸ்வரர்கள் பட்டியல்- 2017
உலக வங்கியின் தரவுகள்,
கிரெடிட் சுய்செஸ் (Credit Suisse ) உலகளாவிய வள தரவு புத்தகத்தின் கடந்த ஆண்டுப் பதிப்பு.