TNPSC Thervupettagam

ஆக்ஸ்பேம் அமைப்பின் “சமத்துவமின்மையைக் குறைப்பதற்கான பொறுப்புடைமை” (CRI) என்ற குறியீடு

October 16 , 2020 1373 days 579 0
  • இந்தியாவானது 2020 ஆம் ஆண்டின் CRI (Commitment to Reducing Inequality) குறியீட்டில் மொத்தமுள்ள 158 நாடுகளிடையே 129 வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டு உள்ளது.
  • இந்தக் குறியீட்டின் 3வது பதிப்பானது கோவிட் – 19 நோய்த் தொற்றுக் காலத்தில் சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுவதின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • 2020 ஆம் ஆண்டின் CRI குறியீட்டில் நார்வே முதலிடத்தில் உள்ளது.
  • இந்தக் குறியீட்டில் 158வது இடத்தில், அதாவது கடைசி இடத்தில் தெற்கு சூடான் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தக் குறியீடானது தனிச் சுதந்திர வல்லுநர்களிடமிருந்து தரவுகளைப் பெற்று, சர்வதேச நிதி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச அறக்கட்டளை அமைப்பானஆக்ஸ்பேம் சர்வதேசம்என்ற மையத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்தக் குறியீடானது பொதுச் சேவைக் கூறு, செயல்பாட்டு வரிக் கூறு, தொழிலாளர் உரிமைகள் கூறு ஆகிய 3 கூறுகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளது.
  • இந்தியாவானது கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுச் சேவைகள் மீதான செலவழிப்பாளர்களில் கடைசியில் உள்ள 10 இடங்களில் 5வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்