ஆக்ஸ்பேம் அமைப்பின் “சமத்துவமின்மையைக் குறைப்பதற்கான பொறுப்புடைமை” (CRI) என்ற குறியீடு
October 16 , 2020 1501 days 637 0
இந்தியாவானது 2020 ஆம் ஆண்டின் CRI (Commitment to Reducing Inequality) குறியீட்டில் மொத்தமுள்ள 158 நாடுகளிடையே 129 வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டு உள்ளது.
இந்தக் குறியீட்டின் 3வது பதிப்பானது கோவிட் – 19 நோய்த் தொற்றுக் காலத்தில் சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுவதின் மீது கவனம் செலுத்துகின்றது.
2020 ஆம் ஆண்டின் CRI குறியீட்டில் நார்வே முதலிடத்தில் உள்ளது.
இந்தக் குறியீட்டில் 158வது இடத்தில், அதாவது கடைசி இடத்தில் தெற்கு சூடான் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் குறியீடானது தனிச் சுதந்திர வல்லுநர்களிடமிருந்து தரவுகளைப் பெற்று, சர்வதேச நிதி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச அறக்கட்டளை அமைப்பான “ஆக்ஸ்பேம் சர்வதேசம்” என்ற மையத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
இந்தக் குறியீடானது பொதுச் சேவைக் கூறு, செயல்பாட்டு வரிக் கூறு, தொழிலாளர் உரிமைகள் கூறு ஆகிய 3 கூறுகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளது.
இந்தியாவானது கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுச் சேவைகள் மீதான செலவழிப்பாளர்களில் கடைசியில் உள்ள 10 இடங்களில் 5வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.