TNPSC Thervupettagam

ஆசியச் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

June 13 , 2020 1630 days 790 0
  • சமீபத்தில் கிர் வனப் பகுதியில் ஆசியச் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக குஜராத் மாநில வனத்துறை அறிவித்துள்ளது.
  • இங்கு 2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி 523 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை தற்போது 2020 ஆம் ஆண்டில் 674 ஆகப் பதிவாகி உள்ளது.
  • கடைசியாக 2015 ஆம் ஆண்டில் பதிவான கணக்கெடுப்பிலிருந்து தற்போது சிங்கங்களின் எண்ணிக்கையானது 29% அளவு அதிகரித்துள்ளது.
  • இந்த எண்ணிக்கையானது 15வது சிங்கங்கள் கணக்கெடுப்பிற்குப் பதிலாக மேற்கொள்ளப்பட்ட “பூனம் அவ்லோகன்” என்று அழைக்கப்படும் ஒரு எண்ணிக்கை கண்காணிப்பு நடவடிக்கையிலிருந்து கணக்கிடப் பட்டுள்ளது.
  • பூனம் அவ்லோகன் என்பது ஒவ்வொரு முழு நிலவின் போதும் மேற்கொள்ளப் படும் ஒரு மாதாந்திர உள்ளக நடவடிக்கையாகும்.
  • வழக்கமான சிங்கக் கணக்கெடுப்பானது 1965 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடத்தப் படுகின்றது.
  • கடைசியான சிங்கக் கணக்கெடுப்பானது 2015 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
  • இது 2015 ஆம் ஆண்டில் 22,000 சதுர கிலோ மீட்டர் அளவில் நடத்தப்பட்டது.
  • இது 2020 ஆம் ஆண்டில், 30,000 சதுர கிலோ மீட்டர் என்ற அளவிற்கு விரிவுபடுத்தப் பட்டுள்ளது.
  • ஆசியச் சிங்கங்கள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் சிவப்புப் பட்டியலில் அருகிவரும் உயிரினமாகப் பட்டியலிடப் பட்டுள்ளது.
  • இந்தியாவில், ஆசியச் சிங்கங்கள் வன விலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972 என்ற சட்டத்தின் கீழ் வரும் அட்டவணை 1 என்பதின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • “ஆசியச் சிங்கங்கள் பாதுகாப்புத் திட்டமானது” மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகத்தினால் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 3 நிதியாண்டுக் காலத்திற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
  • தற்பொழுது இவை கிர் தேசியப் பூங்காவில் மட்டுமே காணப்படுகின்றன.
  • கிர் தேசியப் பூங்கா குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ளது.
  • கிர் ஆனது “மால்தாரிஸ்” என்ற பழங்குடியினருடன் தொடர்புடையதாக விளங்குகின்றது.
  • மால்தாரிஸ் என்பது கிர் வனப் பகுதியில் வாழும் ஒரு சமயம் சார்ந்த ஆயர் குலச் சமூகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்