TNPSC Thervupettagam

ஆசியச் சிறப்புச் சதுரங்க விருதுகள் 2023

March 7 , 2023 502 days 246 0
  • இந்தியக் கிராண்ட்மாஸ்டர் D. குகேஷுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற ஆசியச் சதுரங்கக் கூட்டமைப்பின் வருடாந்திரக் கூட்டத்தில் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு மகாபலிபுரத்தில் நடைபெற்ற 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் 9/11 என்ற கணக்கில் சாதனை அளவில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கத்தை வென்றச் செய்தற்காக வேண்டி இந்த விருதானது வழங்கப்படுகிறது.
  • சென்னையில், FIDE சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆண்டின் சிறந்த நாயகன் விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • கோனேரு ஹம்பி, D.ஹரிகா, R .வைஷாலி, டானியா சச்தேவ் மற்றும் பக்தி குல்கர்னி ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி, 'ஆண்டின் சிறந்த மகளிர் அணி' என்ற விருதினை வென்றது.
  • கிராண்ட் மாஸ்டர் R.B.ரமேஷ் வீரர்களுக்கான ஆண்டின் சிறந்தப் பயிற்சியாளர் என்ற விருதை வென்றார்.
  • கிராண்ட் மாஸ்டர் அபிஜித் குண்டே, வீராங்கனைகளுக்கான ஆண்டின் சிறந்தப் பயிற்சியாளர் என்ற விருதை வென்றார்.
  • அகில இந்தியச் சதுரங்கக் கூட்டமைப்பு (AICF) ஆனது ‘மிகவும் செயல்பாடு மிக்க ஒரு கூட்டமைப்பு’ என்ற விருதைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்