தேநீர் வளர்ப்பு மற்றும் நுகர்வில் முன்னணியில் இருக்கும் 5 நாடுகளின் ஒரு ஒன்றியமான “ஆசியத் தேநீர் கூட்டிணைவானது” (Asian Tea Alliance - ATA) சீனாவின் கியூசோவில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியத் தேநீர் மன்றம், சீனத் தேநீர் சந்தையிடல் மன்றம், இந்தோனேஷியத் தேநீர் சந்தையிடல் மன்றம், இலங்கைத் தேநீர் வாரியம் மற்றும் ஜப்பான் தேநீர் மன்றம் ஆகியவை இதன் உறுப்பு நாடுகளாகும்.
உலகத் தேநீர் நுகர்வை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தக் கூட்டிணைவு ஏற்படுத்தப்பட்டது. இது ஆசியத் தேநீரின் எதிர் காலத்திற்கான ஒரு நிலையான திட்டத்தை உருவாக்கும்.
தேநீர் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இந்தியா (முதலில் சீனா) உள்ளது.
உலகில் தேநீர் நுகர்வில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலமானது தேநீர் உற்பத்தியில் மூன்றாவது மிகப்பெரிய மாநிலமாக விளங்குகின்றது.