இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் தங்களுடையச் சரக்குப் பொருட்களுக்கான ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தினை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன.
ஆசியான்-இந்தியா இடையேயான சரக்கு வர்த்தக ஒப்பந்தமானது (AITIGA) 2009 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டது.
AITIGA ஒப்பந்தத்தின் மறுபரிசீலனை செய்வது இந்திய வணிகத் துறையின் நீண்டகால கோரிக்கையாகும் என்பதோடு இந்த மறுபரிசீலனையை முன்கூட்டியே தொடங்குவது வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும் பரஸ்பர ரீதியிலானப் பயனளிப்பதற்கும் உதவும்.
AITGA ஒப்பந்தத்தின் மறுபரிசீலனையானது இருதரப்பு வர்த்தகத்தில் தற்போதுள்ள சமச் சீரற்றத் தன்மையை நிவர்த்தி செய்வதோடு வர்த்தகத்தை மேம்படுத்தவும் பன்முகப் படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.