TNPSC Thervupettagam

ஆசியாவின் அமைச்சரவைகளுக்கிடையேயான எரிசக்தித் தொடர்பான 8வது வட்டமேசை மாநாடு

September 12 , 2019 1808 days 603 0
  • 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று ஆசியாவின் அமைச்சரவைகளுக்கு இடையேயான எரிசக்தி தொடர்பான 8வது வட்டமேசை மாநாட்டை (Asian Ministerial Energy Roundtable - AMER8) ஐக்கிய அரபு அமீரகம் நடத்தியது.
  • AMER8 நிகழ்வில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா இணை தொகுப்பாளராக உள்ளது.
  • இந்தியாவை மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிரதிநிதித்துவப் படுத்துகின்றார்.
  • இந்தச் சந்திப்பு பின்வருவனவற்றை விவாதிக்கின்றது:
    • மிகவும் போட்டிமிக்க மற்றும் உலக ஆற்றல் உற்பத்தி கலவைக்குப் புதிய தொழில் நுட்பங்களின் பங்கு.
    • பாதுகாப்பான, விலை குறைந்த மற்றும் நிலையான எரிசக்தி சேவைகளுக்கான அனைத்தையும் உள்ளடக்கிய அணுகலை மேம்படுத்துதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்