இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நீர் மேலாண்மை நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் கர்நாடக மாநிலத்தில் ராம்தால் மரோலா சொட்டுநீர் பாசனத் திட்டம் (Drip Irrigation Project) செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதுவே ஆசியாவின் மிகப்பெரிய சொட்டுநீர் பாசனத் திட்டமாகும்.
இந்த சொட்டுநீர் பாசனத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தத்தமது வேளாண் நிலங்களில் நிறுவப்பட்டுள்ள நீர் வழங்கு உருளைகள் (Water Cylinders) மூலம் அனைத்து விவசாயிகளும் தங்களது வேளாண் நிலத்திற்கு தேவையான நீரைப் பெறுவர்.
இந்த நீர் வழங்கு உருளையில் வேதியியல் உரங்களையும் (Fertlizers) பூச்சிக் கொல்லிகளையும் கலக்க இயலும் என்பதால் சொட்டு நீர் பாசனத்தின் வழியே உரமிடுவதும், பூச்சிக் கொல்லி தெளிப்பதும் சாத்தியமாகும்.
கிருஷ்ணா ஆற்றின் உப்பங்கழி (Back waters) பகுதிகளில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்கும் தொழிற் நுட்ப வசதிகளும் இந்தத் திட்டத்தில் அமைந்துள்ளது.