ஆசியாவின் முதல் ஓங்கில் (டால்பின்) ஆராய்ச்சி மையம்
October 7 , 2018 2242 days 1901 0
பீகாரின் தலைநகரான பாட்னாவில், பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் கங்கை ஆற்றின் கரைப்பகுதியில் தேசிய ஓங்கில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளது.
இது ஆசியாவின் முதலாவது ஓங்கில் ஆராய்ச்சி மையமாக அமையவுள்ளது.
பீகாரில் கடந்த அக்டோபர் 05ல் அனுசரிக்கப்பட்ட ஓங்கில் தினத்தன்று இந்த மையத்தின் அமைப்பிறகான அறிவிப்பானது வெளியிடப்பட்டது.
கங்கை நதி வாழ் ஓங்கில்
கங்கை நதி வாழ் ஓங்கிலானது (அறிவியல் பெயர்: பிளாட்டனிஸ்டா கஞ்செட்டிகா) உலகில் உள்ள நான்கு நன்னீர் ஓங்கில் இனங்களில் ஒன்றாகும்.
மற்று மூன்று இனங்களானது யாங்சீ ஆறு, பாகிஸ்தானின் சிந்து நதி மற்றும் அமேசான் ஆறுகளில் காணப்படுகிறன. கங்கை நதி வாழ் ஓங்கிலானது இந்தியா, வங்காளதேசம் மற்றும் நேபாளத்தில் காணப்படுகின்றன.
கங்கை நதி வாழ் ஓங்கிலானது இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கு ஆகும்.
கங்கை நதி வாழ் ஓங்கிலானது இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் 1 வது அட்டவணையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. மேலும் IUCN (International Union for Conservation of Nature) -ஆல் அருகிவரும் இனமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள விக்ரமஷீலா கங்கை வாழ் ஓங்கில் சரணாலயமானது இந்தியாவில் அமைந்துள்ள ஒரே ஓங்கில் சரணாலயமாகும்.