ஆக்ஸ்போர்டு பொருளாதார (Oxford Economics) நிறுவனம், சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆசியாவின் 30 மிகப்பெரும் நகரங்களை தரவரிசைப்படுத்தி உள்ளது.
இதன்படி, ஆசியாவிலேயே டெல்லி அதிவேகமாக வளரக்கூடிய நகரங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டினை ஒப்பிடும் போது 2021-ல் டெல்லியின் பொருளாதார வளர்ச்சி 50 சதவிகிதம் அதிகமாக இருக்கும்.
இந்திய நகரங்கள் சமீபகாலமாக மற்ற ஆசிய நகரங்களைக் காட்டிலும் மிகவேகமாக வளர்ந்து வருகின்றன.
இந்தியாவில் நிதிச்சேவை மற்றும் வணிகச்சேவைத் துறைகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன
முதல் ஐந்து இடங்களில் இந்திய நகரம் அல்லாத ஒரே நகரம் வியட்நாமின் ஹோசிமின் நகரம் மட்டும் தான். மேலும் சீனாவின் வளர்ச்சியும் மிகக் குறைவாக இருக்கும் என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.