TNPSC Thervupettagam

ஆசியா-பசிபிக் பருவநிலை அறிக்கை 2024

November 8 , 2024 21 days 102 0
  • ஆசிய மேம்பாட்டு வங்கியானது, அதன் சமீபத்திய ஆசிய-பசிபிக் பருவநிலை என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • புதைபடிவ எரிபொருட்களிலிருந்து தூய்மை எரிசக்தித் துறைக்கு மாறுவதற்கான பெரிய மாற்றத்தில் இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை இது எடுத்துக்காட்டுகிறது.
  • இந்தியாவின் சீர்திருத்தங்கள் ஆனது, புதைபடிவ எரிபொருள் மானியங்களை 85% குறைக்க வழிவகுத்தது என்பதோடு 2013 ஆம் ஆண்டில் 25 பில்லியன் டாலரில் இருந்த இந்த மானியமானது 2023 ஆம் ஆண்டில் 3.5 பில்லியனாக குறைந்தது.
  • தூய்மை எரிசக்தித் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக 2010 முதல் 2017 ஆம் ஆண்டு வரை நிலக்கரி உற்பத்தி மீதான வீத வரியை இந்தியா அமல்படுத்தியது.
  • ஆனால் நிலக்கரி வீத வரியானது 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடாக மாற்றப்பட்டது.
  • பல்வேறு சீர்திருத்தங்கள் தற்போது இருந்த போதிலும், புதைபடிவ எரிபொருள்கள் ஆனது இன்றும் இந்தியாவின் ஆற்றல் நுகர்வில் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கொண்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்