ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளின் பொருளாதார மற்றும் சமூக கணக்கெடுப்பு 2021 அறிக்கை
April 9 , 2021 1328 days 632 0
“கோவிட் 19 தொற்றுக்குப் பிந்தைய காலகட்டத்தில் மீண்டு வந்த பொருளாதாரங்களை நோக்கி” எனும் ஒரு தலைப்பிலான ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளின் பொருளாதார மற்றும் சமூக கணக்கெடுப்பு 2021 என்ற ஒரு அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் ஆகியவற்றிற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தால் (UNESCAP – பல Economic and Social Commission for Asia and Pacific) வெளியிடப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2021-22 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7% அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய நிதி ஆண்டு பெருந்தொற்றின் தாக்கத்தின் காரணமாக வழக்கமான வர்த்தக நிலையில் 7.7% வீழ்ச்சியினைக் கண்டது.
UNESCAP
UNESCAP என்பது ஆசியா-பசிபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஒரு பிராந்திய வளர்ச்சிப் பிரிவு நிறுவனம் ஆகும்.
இந்த அமைப்பில் இந்தியா உட்பட ஆசியா-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 53 உறுப்பினர் நாடுகளும் 9 துணை உறுப்பினர் நாடுகளும் உள்ளன.