TNPSC Thervupettagam

ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான துணை அறிக்கை

October 12 , 2024 42 days 102 0
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆனது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • ‘2024-26 ஆம் ஆண்டிற்கான உலகச் சமூகப் பாதுகாப்பு அறிக்கையின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான துணை அறிக்கை: பருவநிலை நடவடிக்கைக்கான ஒரு உலகளாவியச் சமூகப் பாதுகாப்பு மற்றும் ஒரு சரியான மாற்றம்’ என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • சுமார் 2.1 பில்லியன் மக்கள் பல்வேறு வாழ்க்கைச் சுழற்சி மற்றும் சமூகப் பொருளாதார அபாயங்களில் இருந்து இன்னும் பாதுகாப்பு பெறாத நிலையிலேயே உள்ளனர்.
  • 2015 ஆம் ஆண்டு முதல் தெற்காசியாவில் சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன் பரவல் விகிதம் 16.7 சதவீத புள்ளிகள் (18.7 முதல் 35.4%) ஆகும்.
  • வங்காளதேசம், சீனா, இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய ஐந்து அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் முறையே 22%, 75.6%, 48.4%, 54.3% மற்றும் 20.2% என்ற பரவல் விகிதங்களைக் கொண்டுள்ளன.
  • வேலை வாய்ப்பின்மை காப்பீட்டுத் திட்டங்கள் இந்தியாவிலும் ஈரானிலும் வழங்கப் படுகின்றன, ஆனால் அவற்றின் பரவல் குறைவாகவே உள்ளது.
  • இந்தியாவில், வேலைவாய்ப்பின்மை காப்பீடு ஆனது உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையில் 11.5% பேருக்கு மட்டுமே சட்டப் பூர்வமாக கிடைக்கப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்