ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியப் பொருளாதாரக் கண்ணோட்டம்
May 22 , 2024 185 days 168 0
சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆனது, ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான அதன் பிராந்தியப் பொருளாதாரக் கண்ணோட்டத்தினை 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆசிய-பசிபிக் பகுதியின் வளர்ச்சி பல்வேறு நாடுகளில் வெவ்வேறு பணவீக்க விகிதங்களுடன் எதிர்பார்ப்புகளை விட 5.0% ஆக உயர்ந்தது.
2024 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் 4.5 சதவீதம் என்ற ஒரு சிறிய வளர்ச்சி மந்த நிலையை பரிந்துரைக்கின்றன என்பதோடு இது எதிர்காலத்தில் ஏற்பட உள்ள பல அபாயங்களை சமநிலைப்படுத்துகிறது.
முன்னதாக 6.5% ஆக இருந்த 2024-25 ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பு ஆனது 6.8% ஆக இருந்தது என்ற நிலையில் இது 2025-26 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி கணிப்பை 6.5% என்ற அளவில் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மீள்திறன் மிக்க உள்நாட்டுத் தேவையின் ஆதரவுடன் இந்தியா மீண்டும் மீண்டும் ஏற்படக் கூடிய நேர்மறையான வளர்ச்சி ஆச்சரியங்களுக்கு ஆதாரமாக இருந்தது.
மேலும், இந்தியாவின் பொருளாதாரத்தினை இயக்குவதில் பொது முதலீடு ஒரு மிக குறிப்பிடத் தக்க காரணியாகும்.